Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஜெல்லி மீன்கள் கடித்து சுமார் 40 பேர் காயம்
தற்போதைய செய்திகள்

ஜெல்லி மீன்கள் கடித்து சுமார் 40 பேர் காயம்

Share:

ஈப்போ, ஆகஸ்ட்.02-

பேரா, லுமூட், தெலுக் செராங்கின் கடற்பகுதியில் நடைபெற்ற பொது நீச்சல் விளையாட்டுப் போட்டியின் போது ஜெல்லி மீன்கள் கடித்து சுமார் 40 பேர் காயம் அடைந்தனர்.

இன்று சனிக்கிழமை காலை 8.15 மணிக்கு தொடங்கிய பொது நீச்சல் போட்டியில் பலதரப்பட்ட வயதுடையவர்கள் பங்கு கொண்டனர்.

போட்டி தொடங்கிய பின்னர் பலர், ஜெல்லி மீன்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். முதலாவது சம்பவத்தில் சிலாங்கூர், காஜாங்கை சேர்ந்த 9 வயது சிறுமி பாதிக்கப்பட்டார். அதன் பின்னர் மஞ்சோங்- லேகிரைச் சேர்ந்த 10 வயது சிறுவன் காயத்திற்கு ஆளானார்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புப் படையினர், மருத்துவக் குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

எனினும் அந்த சிறுவனும், சிறுமியும் பெரும் அவதிக்குள்ளானதால் அவர்கள் உடனடியாக ஶ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். ஆகக் கடைசியாகக் கிடைக்கப் பெற்ற நிலவரத்தின்படி ஜெல்லி மீன்கள் கடித்ததில் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடலில் எரிச்சல், வீக்கம், ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related News