கோலாலம்பூர், நவம்பர்.07-
கடந்த வாரம் கோலாலம்பூரில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் தைவான் பிரபலம் Hsieh Yu-hsin-இன் உடலைப் பெறுவதற்கும், மலேசியாவில் சில சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்கும் அவரது பெற்றோர் பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளனர்.
வயது மூப்பு மற்றும் இயலாமை காரணமாக அவரது பெற்றோரால் மலேசியாவிற்கு வர இயலவில்லை என்று Hsieh -னின் மேலாளரான Chris தெரிவித்துள்ளார்.
Hsieh-இன் பெற்றோர் அவரை மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிட்டுள்ள Chris, வயது முதிர்வினால் அவர்கள் வர இயலாமல் போனதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, Hsieh-ன் உடல் கோலாலம்பூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.








