கோலாலம்பூர், ஆகஸ்ட்.05-
உள்துறை அமைச்சின் கீழ் உள்ள இலாகாக்களின் 11 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ள நடவடிக்கையானது லஞ்சத்தைத் துடைத்தொழிக்கும் வியூகமாகும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சிஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
அமலாக்கத்துறை ஏஜென்சிகள் மத்தியில் லஞ்ச ஊழலை வேரறுப்பது, நம்பகத்தன்மை மற்றும் நேர்மையைப் பேணுவது முதலிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு இத்தகையப் பணியிட மாற்றம் அவசியமாகிறது என்று சைஃபுடின் விளக்கினார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தலைத்தூக்கக்கூடிய ஆரோக்கியமற்ற அதிகார வலைகள் தோன்றுவதைத் தடுக்க அதிகாரிகள் மத்தியில் பணியிட மாற்றம் அவசியம் என்று வலியுறுத்தியிருப்பதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.








