May 24, 2026
Thisaigal NewsYouTube
புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கு 4 கோடி வெள்ளி ஒதுக்கீடு
தற்போதைய செய்திகள்

புதிய பாலத்தை நிர்மாணிப்பதற்கு 4 கோடி வெள்ளி ஒதுக்கீடு

Share:

ஈப்போ , ஆகஸ்ட் 25-

மலைமுகட்டு நீர் பெருக்கினால் கடுமையாக சேதமுற்ற பேரா, ஜம்பதன் லாமா சுங்கை ஸ்லிம் மற்றும் கம்போங் சுங்கை மூடா ஆகிய இரு பாலங்களின் மறு நிர்மாணிப்புக்கு 4 கோடி வெள்ளியை மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக மாநில கட்டமைப்பு, எரிபொருள், நீர் மற்றும் பொது போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ முகமது நிசார் ஜமாலுதீன் தெரிவித்தார்.

இரு பாலங்களின் நிர்மாணிப்பில் பந்தர் பெஹ்ராங் - கையும், Slim Village- ஜையும் இணைக்கும் ஜம்பதன் லாமா சுங்கை ஸ்லிம் பாலத்தின் நிர்மாணிப்பிற்கு அதீத முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இரு பாலங்கள் நிர்மாணிப்பு தொடர்பாக விரிவான் ஆய்வறிக்கை ஒன்றை தயாரிக்கும்படி மாநில பொதுப்பணி இலாகாவை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாக நிசார் ஜமாலுதீன் குறிப்பிட்டார்.

Related News