பிகேஆர் கட்சியின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான மகளிர், இளைஞர் பிரிவு மாநாடு, இன்று காலையில் ஏகக்காலத்தில் தொடங்கியது. புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் தொடங்கிய இந்த மாநாட்டை பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துள்ளார்.
நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டிற்கு தலைமையேற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில் அன்வாரின் கடந்த 25 ஆண்டு கால போராட்டத்தை சித்தரிக்கும் ஒரு குறும்படமும் இந்த மாநாட்டில் திரையிடப்படுகிறது.








