தமது பெயருக்கு முன்னாள் போலி டத்தோஸ்ரீ பட்டத்தை பயன்படுத்தி வந்த நபருக்கு ஜோகூர், கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
போலி பட்டங்களையும், விருதுகளையும் பயன்படுத்தி வரும் நபர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதற்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பிராசிகியூஷன் அதிகாரி முன் வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹைடா ஃபரிட்சால் அபு ஹாஸ்ஸான், 50 வயதுடைய இம்ரான் தொலோட் என்பவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்தார்.
பகாங் சுல்தானிடமிருந்து எந்தவொரு உயரிய பட்டத்தையும் பெறாத நிலையில் தமக்கு வெளியில் வழங்கப்பட்ட போலி பட்டத்தை அந்த நபர் தமது பெயருக்கு முன்னாள் பயன்படுத்தி வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








