Oct 16, 2026
Thisaigal NewsYouTube

எஸ்.பிஎம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டியதில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எஸ்.பிஎம்., எஸ்.டி.பி.எம். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டியதில்லை

புத்ராஜெயா. டிச.2-


இன்று டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கியுள்ள எஸ்.பி.எம். மற்றும் அடுத்து நடைபெறக்கூடிய எஸ்.டி.பி.எம். தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என்று கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்துள்ளார்.

தற்போது வடக்குகிழக்கு பருவமழை பெய்து வரும் வேளையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்கள், தேர்வில் அமர்வதில் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்கு விரிவான வழிமுறையை கல்வி அமைச்சு கொண்டு இருப்பதாக அஸ்மான் குறிப்பிட்டார்.
வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ள பகுதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குரிய வசதிகளை ஓப்ஸ் பாயோங் என்ற திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை கல்வி அமைச்சினால் சரியாக நிர்வகிக்க முடியும் என்று அஸ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →