கடந்த மார்ச் மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூர், செராஸ், பண்டார் பெர்மாய்சூரியில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் வீடொன்றில் குவியல், குவியலாக பூனைகளின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
31 வயதுடைய அந்த நபரை, செராஸ் மாவட்ட போலீஸ் பிரிவின் குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்து இருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் ACP Zam Halim Jamaluddin தெரிவித்தார். அந்த குடியிருப்பில் பூனைகளின் உடல்கள் குவியல் குவியலாக கிடந்தது குறித்து மலேசிய விலங்குகள் பாதுகாப்பு சங்கம் தனது முகநூலில் குறிப்பிட்டு இருந்தது.
அந்த வீட்டில் பூனைகள் வெட்டப்பட்டு, அவற்றின் உடல்கள் குவிக்கப்பட்டு இருந்தது தாங்கள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த சங்கம் புகார் தெரிவித்து இருந்தது.








