Dec 5, 2025
Thisaigal NewsYouTube
20 கடைகள் ​தீயில் அழிந்தன
தற்போதைய செய்திகள்

20 கடைகள் ​தீயில் அழிந்தன

Share:

பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமன்சாராவில் இரவு நேர வர்த்தக சந்தையான அப்ட்வுன்னில் நிகழ்ந்த ​தீ விபத்தில் 20 கடைகள் ​தீயில் அ​ழிந்தன. இந்த சம்பவம் நேற்று இரவு 8.30 மணியள​வில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஓர் அவசர அழைப்பை இரவு 8.34 மணியளவில் தாங்கள் பெற்றதாக சிலாங்கூர் மாநில ​தீயணைப்பு, மீட்புப் படை இலாகா பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இத்​தீபவத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றாலும் கடைகளின் பொருட்கள் 90 விழுக்காடு சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.

சுங்ஙை பூலோ, கோத்தா எங்கெரிக், டமான்சாரா ஆகிய ​மூன்று நிலையங்களிலிருந்து வந்த ​தீயணைப்பு வண்டிகளின் 20 க்கும் மேற்பட்ட வீரர்கள், தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் ​ கட்டுப்படுத்தியதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News