கோலாலம்பூர், அக்டோபர்.04-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாடாங் பெசார் மற்றும் கேஎல் சென்ட்ரல் இடையே இரண்டு கூடுதல் மின்சார ரயில் சேவைகளை இயக்க இருப்பதாக கேடிஎம்பி அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு இரயில்கள் வரும் அக்டோபர் 17 முதல் 22 ஆம் தேதி வரை இயங்கப்படவுள்ளன.
இதற்கான டிக்கெட் விற்பனை, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி, காலை 10 மணியளவில் தொடங்கும் என்றும் KTMB தெரிவித்துள்ளது.
அதே வேளையில், இந்த ஆறு நாட்கள் சிறப்பு இரயில் சேவையின் போது தினமும் 630 கூடுதல் இருக்கைகள் வழங்கப்பட உள்ளன.
வர்த்தக வகுப்பு உட்பட மொத்தமாக 3,780 கூடுதல் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேடிஎம்பி தெரிவித்துள்ளது.








