ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.15-
மலேசியாவில் சாலையோர உணவுகளுக்குப் புகழ் பெற்ற நகரங்களில் ஒன்றான பினாங்கு, ஆசியாவின் முதல் 10 சாலையோட உணவு நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
பிரிட்டிஷ் ஊடகமான டைம் அவுட் வெளியிட்டுள்ள அப்பட்டியலில், ஹனோய், சிங்கப்பூர், மும்பை, சியாங் மாய், தைனான், ஒசாகா, பாங்கோக், நோம் பென், செங்டு ஆகிய நகரங்களின் வரிசையில் பினாங்கையும் குறிப்பிட்டிருக்கிறது.
இது குறித்து பினாங்கு மாநில சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வ பொருளாதாரக் குழுவின் தலைவரான வோங் ஹோன் வாய், சமூக ஊடகங்களில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த ஜூலை 2016 இல், புகழ் பெற்ற உணவு விமர்சகரான ஜேம்ஸ் ஓஸ்லேண்ட், பினாங்கை உலகின் சிறந்த உணவுகள் கொண்ட நகரமாக அங்கீகரித்தார்.
அதே ஆண்டு, சிஎன்என் செய்தி ஊடகம், உலகின் காரசாரமான தெருவோர உணவுகளில் ஒன்றாக பினாங்கு அசாம் லக்சா மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.








