பினாங்கில் உள்ள 5ஜி தொடர்பு அலை இவ்வாண்டு இறுதிக்குள் அனைத்து தகவல் தொடர்பு உள்கட்டமைப்புக்கான பணிகள் முடிந்தப் பிறகு, மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 80 விழுக்காட்டை விட கூடுதலாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பினாங்கில் 470 5ஜி கோபுரங்களை அமைக்க தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சு இலக்கு கொண்டுள்ளதாகவும், அவ்வெண்ணிக்கையில் இதுவரை 290 கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர் தியோ நீ சிங்
தெரிவித்தார்.
பினாங்கில் மொத்தம் 244 5ஜி கோபுரங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன, மேலும் அம்மாநிலத்தில் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5ஜி தொடர்பு அலை சேவை 67.7 விழுக்காடு எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"இதுவரை 64.7 விழுக்காடாக உள்ள நாட்டின் மொத்த சராசரி 5ஜி தொடர்பு அலை சேவையில், பினாங்கு மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் பினாங்கு அதன் 5ஜி தொடர்பு அலை சேவையில் 80 விழுக்காட்டைத் தாண்டும்" என்று செய்தியாளர்களிடம் தியோ நீ சிங் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 80 விழுக்காடு 5ஜி தொடர்பு அலையின் இலக்கை எட்டுவதை உறுதிசெய்ய, டிஜிட்டல் நேஷனல் நிறுவனம் உடன் அமைச்சு இணைந்து செயல்படுவதாகக் கூறினார்.
முன்னதாக, பினாங்க, பகான் நாடாளுமன்றத்தில் மெர்டேக்கா என்ற சமூகத் திட்டத்தை தியோ நீ சிங் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாகன் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங்கும் கலந்து கொண்டார்.

தற்போதைய செய்திகள்
பினாங்கில் 5ஜி தொடர்பு அலையின் சேவை இவ்வாண்டு இறுதிக்குள் 80 விழுக்காட்டிற்கு மேல் அடையும் – தியோ
Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


