Mar 21, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 33 ஆண்டுகள் சிறை, பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு 33 ஆண்டுகள் சிறை, பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது

Share:

புத்ராஜெயா, மே 15-

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தனது மனைவியை துப்பாக்கினால் சுட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை 33 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றியமைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ ரவீந்திரன் என். பரமகுரு, குற்றச்சாட்டப்பட்டிருக்கும் சோஃபியன் அபு ஹாசன் - னுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கூச்சிங் உயர்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை ஒருமனதாக ரத்து செய்தார்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அந்த அதிகாரிக்கு 33 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படியும் விதிக்க நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் அந்நபரை மரண தண்டனையிலிருந்து விடுவித்து, சிறை தண்டனை வழங்கியதாக தெரியப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி மாலை 3.15 மணியளவில் சரவாக், செரியான் அருகே 33 வயது சித்தி நத்ரா அப்துல்லா என்கிற அவரின் மனைவியை கழுத்தில் சுட்டுக் கொலை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து