சுங்கை பெசார், செப்டம்பர்.01-
ஜோகூர், சிகாமாட்டில் அண்மையில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இயற்கை சீற்றத்திற்கான எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி சிலாங்கூர் மாநில மீட்புக் குழுவினரை மாநில அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் மலேசிய வானிலை ஆய்வுத் துறையிடம் தேவையான கூடுதல் சரிபார்ப்பு நடவடிக்கைகளைத் தாங்கள் மேற்கொள்ளவிருப்பதாக மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
சிகாமாட்டில் இதுவரை ஏற்பட்ட பூகம்பங்கள் மிகவும் குறைந்த அளவிலானவை என அறிக்கைகள் கூறுகின்றன. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்படுவதற்குச் சாத்தியம் இல்லை. இருப்பினும் வானிலை ஆய்வுத் துறையுடன் சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்றார் அவர்.








