Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கார் மரத்தில் மோதி 2 நண்பர்கள் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார் மரத்தில் மோதி 2 நண்பர்கள் பலி

மலாக்கா, ஜூன்.22-

மலாக்கா, ஜாலான் பெர்சியாரான் பந்தாய் கிளேபாங் சாலையில் இன்று காலை 6:45 மணியளவில் ஒரு புரோட்டான் வீரா கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதனால், முகமட் நுர் ஸமானி முகமட் நஸேரியும், 25 வயது பயணியான முகமட் ஹஸிக்கும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

இந்தக் கார், மலாக்கா நகரில் இருந்து புக்கிட் ரம்பாய் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, காரில் சிக்கிய ஓட்டுநரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →