Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சுகாதாரச் சேவைகளுக்குச் சுமை இல்லை ! - சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா
தற்போதைய செய்திகள்

கோவிட்-19 சம்பவங்கள் அதிகரிப்பு ! - சுகாதாரச் சேவைகளுக்குச் சுமை இல்லை ! - சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா

Share:

மலேசியாவில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், தொற்று கண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை வழங்க சுகாதார சேவைகளுக்கு சுமையாக இருக்காது என சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக , ஆண்டிறுதியில் கோவிட்-19 சம்பவங்கள் மலேசிய நிலையிலும் உலகளாவிய நிலையுலு அதிகரித்து வருகிறது எனக் கூறிய அமைச்சர், சொற்ப அறிகுறிகள் தென்படுவோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள அவசியமில்லை எம்றார்.

இது வரையில் மலேசியாவில் புதிய வகை கோவிட்-19 தொற்று கண்டறியப்பட வில்லை. நாட்டில் தற்போது ஓமிக்ரோன் வகை தொற்று பரவி இருந்ததை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

எனவே, பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேண வேண்டும் எனவும் முகக்கவரி அணியவும் பரிந்துரைக்கப்படுவதாக அமைச்சர் மேலும் சொன்னார்.

ஒரு வேளை, அறிகுறிகள் கடுமையாக இருக்கின்ற நிலையில், மருத்துவரைச் சென்று பார்ப்பது மிக மிக் அவசியம் என்றார்.

Related News