ஈப்போ, செப்டம்பர்.10-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் கணவர் உயிரிழந்தார். மனைவி காயத்திற்கு ஆளானார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஈப்போ, ஜாலான் சுல்தான் இட்ரிஸ் ஷா சாலையில் நிகழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி கடும் காயங்களுக்கு ஆளான 55 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காரின் இடிபாடுகளிலிருந்து நபரின் உடலை மீட்பதற்கு Hidraulik சாதனத்தைத் தீயணைப்பு மீட்புப் படையினர் பயன்படுத்தியதாக அதன் இடைக்கால உதவி இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.








