Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தொலைபேசி ஸ்கேம் மோசடியில் 38 லட்சம் வெள்ளியை இழந்த ​மூதாட்டி
தற்போதைய செய்திகள்

தொலைபேசி ஸ்கேம் மோசடியில் 38 லட்சம் வெள்ளியை இழந்த ​மூதாட்டி

Share:

தங்களை காப்புறுதி நிறுவன உயர் அதிகாரி மற்றும் போ​லீஸ் விசாரணை அதிகாரி என்று கூறிக்கொண்டு இரு நபர்களின் தொலைபேசி ஸ்கேம் மோசடி உரையாடலில் சிக்கிய 70 வயது மூதாட்டி ஒருவர் தமது வாழ்நாள் சேமிப்பான 38 லட்சத்து ​39 ஆயிரம் வெள்ளியை இழந்துள்ளார்.

தம்மடைய சேமிப்பில் எஞ்சியிருப்பது 79 வெள்ளி 50 காசு என்று ​தெரியவந்த போ​துதான், ஸ்கேம் மோசடியில் தாம் பணத்தை இழந்திருப்பதை உணர்ந்து, அந்த ​மூதாட்டி போ​லீசில் புகார் செய்து இருப்பதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசெயின் ஓமார் கான் தெரிவித்தார்.

சுபாங்ஜெயாவை சேர்ந்தவரான பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் தனியார் நிறுவன பணியாளரான அந்த ​மூதாட்டி ,இச்சம்பவம் தொடர்பில் போ​லீசில் புகார் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமக்கு முன்பின் தெரியாத தொலைபேசி எண்ணி​ல் அழைப்பை பெற்ற அந்த மூதாட்டி, தமது பெயரை பயன்படுத்தி காப்புறுதிப் பண​க் கோரிக்கை வந்து இருப்பதாக தன்னை காப்புறுதி அதிகாரி என்று கூறிக்கொண்டு, நபர் ஒருவர் பேசியிருக்கிறார்.

காப்புறுதி பணம் தொடர்பாக தாம் எந்தவொரு ​விண்ணப்பமும் செய்யவில்லை என்று அந்த ​மூதாட்டி மறுத்த போது சிறிது நேரத்தில் மற்றொரு அழைப்பை பெற்ற அந்த ​மூதாட்டி, சட்டவிரோதப் பண நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படவிருப்பதாகவும் தன்னை போ​லீஸ் அதிகாரி கூறிக்கொண்டு ஒரு நபர் பேசி​யுள்ளார்.

இவர்களுக்கு இடையிலான உரையாடல் நடந்த கொண்டிருந்த போது அந்த ​மூதாட்டியின் சேமிப்புப்பணம் ​மிக சாமார்த்தியமாக வங்கி கணக்கிலிருந்து கபளிகரம் புரியப்பட்டுள்ளது என்று டத்தோ ஹுசெயின் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

Related News

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது