Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுகள் சேதம்
தற்போதைய செய்திகள்

தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுகள் சேதம்

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.12-

இன்று அதிகாலை 6:30 மணியளவில், மாசாய், கம்போங் ஓராங் அஸ்லி தெலுக் ஜாவாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 வீடுகள் தீயில் கருகி சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து காலை 7.04 மணியளவில் தகவலைப் பெற்ற ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் அடுத்த 10 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், 16 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டதாகவும், 30 வீடுகள் சேதமடைந்ததாகவும் பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் கமாண்டர் முஹமட் சுப்ரி முஹமட் இசா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜாலான் டெடாரு 11, கடலோர கிராமத்திலுள்ள, மர வீடுகளில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News