கிள்ளானில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபரால் உயிரிழந்த 33 வயது அமிருல் ஹபீஸின் மனைவி நூர் நாடியா, தனது கணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தில் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
"எனது மூன்று சிறு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் சட்டப்படி போராடுவேன்; சிறைத்தண்டனை மட்டும் போதாது, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்," என்று அவர் கண்ணீருடன் கூறினார்.
உயிரிழந்த அமிருல், தனது மூத்த மகனுக்கு கணிதப் புத்தகம் வாங்கச் சென்றபோதே இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.
விபத்திற்கு முன்னதாக, அமிருல் தனது குடும்பத்தினரிடம் தான் "டிவியில் வரப்போவதாக" விளையாட்டாகக் கூறியது தற்போது பலித்திருப்பது தங்களை உலுக்கியுள்ளதாக அவரது தாயார் ஃபரிதா உருக்கமாகத் தெரிவித்தார். தற்போது சந்தேக நபர் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.









