Dec 5, 2025
Thisaigal NewsYouTube
3 ஆர் சட்டவிதி ஒரு சமயத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல:  ஏஜி முடிவைக் கேள்வி எழுப்பினார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
தற்போதைய செய்திகள்

3 ஆர் சட்டவிதி ஒரு சமயத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல: ஏஜி முடிவைக் கேள்வி எழுப்பினார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

Share:

கோலாலம்பூர், ஜூலை.22-

இந்து மதத்தைத் தொடர்ந்து அவமதித்து வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர்களான ஜம்ரி வினோத் காளிமுத்து மற்றும் ஃபிர்டாவுஸ் வோங் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அறிவித்துள்ள சட்டத்துறைத் தலைவரின் முடிவு குறித்து மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இனம், சமயம் மற்றும் அரச பரிபாலனம் குறித்து வியாக்கியானம் செய்கின்ற யார் மீதும் 3ஆர் சட்ட விதி பாயும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்து மதத்தைத் தொடர்ந்து அவமதித்து, பல்வேறு வியாக்கியானம் செய்து வரும் இந்த இரு நபர்கள் மீது ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்து இருப்பதாக சட்டத் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் 3ஆர் என்பது ஒரு சமயத்தை மட்டும் பாதுகாப்பதற்குரிய சட்ட விதி அல்ல என்பதை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

மலேசியாவில் அனைத்து சமூகங்களிலும் மத நல்லிணக்கம், பொது ஒழுங்கு மற்றும் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கவே 3ஆர் சட்டவிதி உள்ளது என்பதை டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டினார்.

ஆனால், ஜம்ரி வினோத் காளிமுத்து, ஃபிடாவுஸ் வோங் ஆகியோரின் விவகாரங்களில் குறிப்பிட்ட வழக்குகளை மட்டுமே நீதிமன்றத்திற்குக் கொண்டுச் செல்ல முடியும் என்பது போல் சட்டத்துறை தலைவரின் முடிவு அமைந்து இருப்பதைப் போல் உள்ளது. இது சட்டத்துறை தலைவரின் நடுநிலையான கொள்கையாக இல்லை.

3ஆர் ஓர் அர்த்தம் பொதித்த சட்டவிதியாக இருக்குமானால் மத விவகாரத்தை எழுப்பி அதனைச் சர்ச்சையாக்கி வியாக்கியானம் செய்கின்ற அனைவர் மீதும் பாரபட்சமின்றி பாய வேண்டும். அந்த முடிவில், சட்டத்துறை அலுவலகம் நேர்மையாகவும், உறுதியாகவும், நியாயமாகவும் செயல்பட வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாதிட்டார்.

Related News