Oct 16, 2026
Thisaigal NewsYouTube

நகையை திருடிய கடை பணியாளர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நகையை திருடிய கடை பணியாளர் கைது

நவ. 23-

தாம் பணியாற்றி வந்த நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடி பதுக்கி வைத்திருந்த பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோகூர்பாரு, தாமான் டயாவில் உள்ள ஒரு நகைக்கடையில் மோதிரம் ஒன்று காணாமல் போனது தொடர்பில் நிர்வாகம் அலசி ஆராய்ந்து வந்த வேளையில் அந்த மோதிரத்தை பணியாளர்தான் திருடியுள்ளார் என்பது கடையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமரா மூலம் அம்பலமானது.

இதன் தொடர்பில் அந்த நகைக்கடையின் 41 வயது ஆண் பணியாளர் ஒருவரை தாங்கள் கைது செய்துள்ளதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமாட் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →