கோலாலம்பூர், அக்டோபர்.30-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வியாழக்கிழமை சந்தித்தார். புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்த தகவல், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் முகநூலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மொத்தம் 80 பத்திரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன என்று நேற்று பிரதமர் அலுவலகம் அறிவித்து இருந்தது.








