கோல பிலா, செப்டம்பர்.07-
மலேசியாவின் பரபரப்பான அரசியல் வட்டாரங்களில் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும் பல உயர் மட்ட ஊழல் வழக்குகள் குறித்த முக்கியத் தகவல்கள், வருகிற செவ்வாய்க்கிழமை வெளியாகவுள்ளன. முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், ஓப் சிகாரோ எனப் பெயரிடப்பட்ட பெரும் மோசடி வழக்கும், கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற உயர்மட்ட அதிகாரிகள் மீதான வழக்குகள் ஆகியவை குறித்த புதிய தகவல்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவிக்கவுள்ளார். இந்த வழக்குகளில் பல நூறு வங்கிக் கணக்குகள் சம்பந்தப்பட்டுள்ளதால், விசாரணைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, கோலாலம்பூர் மாநகராட்சி வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








