Oct 18, 2026
Thisaigal NewsYouTube

யானைத் தாக்கி முதியவர் மரணம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
யானைத் தாக்கி முதியவர் மரணம்

ஹுலு திரெங்கானு , அக்டோபர் 05-

வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்று கூறப்படும் 65 வயது முதியவர் ஒருவர், யானைகளால் தாக்கப்பட்டு, கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் உலுதிரெங்கானுவில் நிகழ்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

காலை 8.30 மணியளவில் கொல்லைக்கு செல்வதாக கூறி சென்ற அந்த முதியவர் பின்னர் வீடு திரும்பாததால் அவர் காணாதது குறித்து குடும்ப உறுப்பினர்கள் அச்சம் அடைந்தனர்.

அந்த முதியவரை தேடும் பணியை கிராமத்து மக்கள் தொடங்கிய போது, ரத்த காயங்களுடன் அந்த முதியவரின் சடலம் இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →