ஆகஸ்ட் 10 தொடங்கி மலேசிய முழுவதும் அமைந்துள்ள LFS cinema திரேடிங் திரையரங்குகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயீலர் திரைப்படம் வெற்றிகரமாக திரையீடு கண்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து, அனிருத் இசையமைப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி உள்ள இந்தப் பிரமாண்டமான திரைப்படத்தைக் கொண்டாடும் விதமாக லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் திரேடிங் கின் ஜி.எஸ்.சி, பி.பி.சி.சி, லாலாபோர்ட் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள திரையரங்குகளில் பலவகை நடவடிக்கைகள் வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் நாள் வரை மேற்கொள்ளப்பட உள்ளன.
ரஜினி மனியா என்ற கருப்பொருள் அடிப்படையில், காவாலா நடன போட்டி, 24 மணி நேரம் ஜெயீலர் திரைப்பட திரையீடு, ஜுஜுபி போப் கோர்ன் சாப்பிடும் போட்டி, ரஜினி படக் கதை சொல்லும் போட்டி என பல்வேறு நடவடிக்கைகள் ரஜினியின் ஜெயீலர் படத்தைக் கொண்டாடும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ரஜினி நடித்து வெளியான சூப்பர் ஹீட் திரைப்படங்களான அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி திரைப்படக் காட்சிகள் கொண்ட பின்புலத்தில் புகைப்படம் எடுப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், ரஜினி மனியா கொண்டாட்டத்தில் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் திரேடிங் கேட்டுக் கொள்கிறது.








