கோலாலம்பூர், ஜூலை.28-
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற துருன் அன்வார் பேரணி தொடர்பில் பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பட்ருல் ஹிஷாம் ஷாஹரின் என்ற செகுபார்டைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் செகுபார்ட், அவரின் வீட்டில் கைது செய்யப்பட்டதை அவரின் வழக்கறிஞர் ராஃபிக் ரஷிட் அலி உறுதிச் செய்துள்ளார்.
செகுபார்ட் நாளை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் இன்று பிற்பகலில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவரான செகுபார்ட் கைது செய்யப்பட்டதற்கானக் காரணங்கள் தெரியவில்லை. ஆனால், அந்தப் பேரணியின் போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் உருவப் படத்தைப் பிரம்பினால் அடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக செகுபார்ட் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








