ஜோகூர் பாரு, டிசம்பர்.13-
ஜோகூர் பாருவில் அடுத்தாண்டு சுயமாக இயங்கும் இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. ஜோகூர் பாருவிற்கு வருகை தரும் சுற்றுப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும், இந்த இலவச பேருந்து வாயிலாகத் தன்னிகரற்ற ஜோகூர் பாரு அழகை ரசிக்கலாம் என்று மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் ஹாஃபிஸ் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
இந்த இலவசப் பயணப் பாதைகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இலக்கவியல் அமைச்சு ஒதுக்கியிருக்கும் 2.79 மில்லியன் ரிங்கிட் நிதியில் ஜோகூர் பாரு மாநகர் மன்றம், திட்டமிட்டுள்ள மூன்று விவேக மாநகர் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
பயன்படுத்தப்படவிருக்கும் பேருந்துகளைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கையை ஜோகூர் பாரு மாநகர் மன்றம் மேற்கொண்டு வருவதாக டத்தோ ஹாஃபிஸ் அஹ்மாட் குறிப்பிட்டார்.








