கூச்சிங், செப்டம்பர்.27-
நேற்று வெள்ளிக்கிழமை மாலை சராதொக்கில் உள்ள கிரியான் ஆற்றில் 10 பேருடன் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில், 4 தொழிலாளர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
நேற்று மாலை 5.30 மணியளவில், ZCCC கட்டுமானப் பிரிவின் 10 ஊழியர்கள் வேலை முடிந்து, படகில் செல்கையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எஞ்சிய ஆறு பேர், மூழ்கிய படகின் ஒரு பகுதியைப் பிடித்து உயிர் தப்பினர் என்றும், பின்னர் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்றும் சரவாக் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.








