Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது அரசின் கடமை

திசைகள் செய்திப்பிரிவு
Share:

ஜன.10-

பொதுச் சேவைத் துறை ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது அரசின் கடமை என்றும், சிரமப்படும் மக்களுக்கு உதவுவதால் எந்த அரசும் வீழ்ச்சியடையாது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். மாறாக, பொறாமை, அடக்குமுறை , பொது நிதியை கொள்ளையடிப்பது போன்ற காரணிகளால்தான் அரசுகள் வீழ்ச்சியடைகின்றன என்றார். பொதுச் சேவைத் துறை ஊழியர்களில் B40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் அவர்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், விமர்சகர்கள் நாட்டின் வளர்ச்சியிலும் பொருளாதாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அற்ப விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முக்கிய நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பழிவாங்கலால் எடுக்கப்படவில்லை என்றும், திருடப்பட்ட நிதியை மக்களுக்கு திருப்பி கொடுக்கும் நோக்கத்துடன் தான் எடுக்கப்படுகிறது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்