Jun 30, 2026
Thisaigal NewsYouTube
கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

Share:

நாட்டில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்தோரை அழைத்து வந்த கெங் அஷ்ரப் என்ற கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேரை குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாங்கில் உள்ள ஒரு குடியிருப்பில் நள்ளிரவு 12.40 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையில் 27 வங்காளதேச ஆடவர்கள் மற்றும் 3 இடைத்தரகர்கள் பிடிபட்டனர்.

இந்தக் கும்பல், கடந்த ஓர் ஆண்டு காலமாக அண்டை நாட்டு எல்லை வழியாக ஆட்களைக் கடத்தி வந்து, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் வேலைக்கு அமர்த்தி வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குடிவரவுச் சட்டம் மற்றும் மனிதக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்தக் கும்பல் இதுவரை சுமார் 2.4 மில்லியன் ரிங்கிட் வரை சட்டவிரோதமாக வருவாய் ஈட்டியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Related News