Aug 13, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு RXZ மோட்டார் சைக்கிள் பேரணியில் 46 விபத்துகள்; 11 பேர் பரிதாபமாக பலி
தற்போதைய செய்திகள்

திரங்கானு RXZ மோட்டார் சைக்கிள் பேரணியில் 46 விபத்துகள்; 11 பேர் பரிதாபமாக பலி

Share:

திரெங்கானுவில் நடைபெற்ற 'RXZ மெம்பர்ஸ் 8.0' (RXZ Members 8.0) மோட்டார் சைக்கிள் பேரணியின் போது, கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை மொத்தம் 46 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன,.

இவ்விபத்துகளில் 11 பேர் உயிரிழந்த வேளையில், 5 பேர் கடுமையான காயங்களுக்கும், 30 பேர் சொற்பக் காயங்களுக்கும் ஆளாகியுள்ளனர் என புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை இயக்குனர் ஹஸ்புல்லா அலி தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் 21 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். அலட்சியம், வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியது மற்றும் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியதே இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணங்கள் எனக் கூறிய அவர், உயிரிழப்பை ஏற்படுத்திய 11 விபத்துகளும் 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Related News