Jul 1, 2026
Thisaigal NewsYouTube
அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்
தற்போதைய செய்திகள்

அடுத்தாண்டு சித்திரா பௌணர்மி திருவிழாவில் தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணும் - டத்தோ சிவநேசன் தகவல்

Share:

அடுத்த ஆண்டு தெலுக் இந்தான் சித்திரா பௌணர்மி திருவிழாவில் அமைக்கப்படும் தற்காலிக கடைகள் இடம் மாற்றம் காணப்படும் என்ற அறிவிப்பை நேற்று பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் தெலுக் இந்தான், சுற்றுலாத் தலமான (சாய்ந்த கோபுரம்) மணிகூண்டு மற்றும் அதன் வளாகம் பெரிய அளவில் உருமாற்றம் அடைவதற்கான மேம்பாட்டு பணி தொடங்கப்படவுள்ளதால் தற்காலிக கடைகள் அமைக்கப்படும் இடத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக வணிகக் கூடாரங்கள் பழைய இடத்திலிருந்து அங்குள்ள (OCBC) ஜாலான் மக்கோத்தாவுக்கு மாற்றப்படும் என்றும், அடுத்தாண்டு ஊராட்சி மன்றம் தீர்மாணித்த புதிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் டத்தோ சிவநேசன் கேட்டுக்கொண்டார்.

மணிகூண்டு மேம்பாட்டு திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்படுவதால், அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, அடுத்தாண்டு விழாவில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்திற்கு மாறவேண்டும் என்றும் டத்தோ சிவநேசன் வலியுறுத்தினார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை