ஈப்போ, ஜனவரி.19-
பங்கோர் தீவில், ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவானைச் சேர்ந்த 72 வயதான பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இச்சம்பவமானது நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்ததாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
பூலாவ் கியாம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் அவர் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி விட்டதாகக் கூறப்படுகின்றது.
இச்சம்பவமானது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று சவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஸ்கோர்கெலிங் என்பது ஒரு நீர் விளையாட்டு ஆகும். இதன் மூலம், முகமூடி மற்றும் ஸ்னோர்கெல் எனப்படும் சுவாசக் குழாயைப் பயன்படுத்தி, நீரின் மேற்பரப்பில் நீந்தியபடி, நீருக்கடியில் உள்ள உயிரினங்களைக் கவனிக்க முடியும்.








