Aug 12, 2026
Thisaigal NewsYouTube
அந்த வரைப்படம் குறித்து அலோர் ஸ்டார் மாநகர் மன்றம் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த வரைப்படம் குறித்து அலோர் ஸ்டார் மாநகர் மன்றம் விளக்கம்

Share:

அலோர் ஸ்டார், மே.30-

அலோர் ஸ்டார், மேடான் செனியில் உள்ள ஒரு மலாய்க்கார வர்த்தகத் தளதில் கட்டடம் ஒன்றின் சுவரில் வரையப்பட்ட முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் உருவமைப்பைக் கொண்ட சுவர் ஓவியம், அழிக்கப்பட்டு இருப்பது குறித்து மாநகர் மன்றம் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பழங்கால கட்டடத்தைச் சீரமைப்பு செய்வதற்கு அதன் உரிமையாளர் செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அலோர் ஸ்டார் மாநகர் மன்றம் அனுமதி அளித்து இருப்பதாக டத்தோ பண்டார் டத்தோ அப்துல் காஃபார் யாஹ்யா தெரிவித்தார்.

அந்தக் கட்டடம் சீரமைப்பில் இருப்பதால் அந்த ஓவியம் அழிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் முடிந்த பின்னர் அந்த தேசியவாதியின் உருவமைப்பைக் கொண்ட ஓவியத்தை சுவரில் வரையலாம் அல்லது வேறு ஏதாவது ஓர் இடத்தில் அது போன்று ஓவியம் காட்சிக்கு வைக்கப்படலாம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News