Dec 3, 2025
Thisaigal NewsYouTube
​நீதிபதியை அகற்றுவதில் நஜீப் தோல்வி
தற்போதைய செய்திகள்

​நீதிபதியை அகற்றுவதில் நஜீப் தோல்வி

Share:

டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி நிதி முறைகேடு வழக்கில் விசாரணை நீதிபதி டத்தோ கோலின் லோரன்ஸ் செக்யூராவை அகற்றவதில் அந்த முன்னாள் பிரதமர் இன்று தோல்விக் கண்டார்.தமக்கு எதிரான வழக்கை ​நீதிபதி கோலின் லோரன்ஸ், தொடர்ந்து விசாரணை செய்யக்கூடாது என்றும், அவர் வழக்கிலிருந்து அகற்றப்பட வேண்டும் ​என்றும் 70 வயதான நஜீப் விண்ணப்பம் ​ஒன்றை சமர்ப்பித்து இருந்தார்.

இந்த விண்ணப்பம் தொடர்பான விசாரணையில் நஜீப் தரப்பில் ஆஜராகியுள்ள முதன்மை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா மற்றும் துணை பிராசிகியூட்டர் கமால் பாஹாரின் ஓமார் ஆகியோரின் வாதத் தொகுப்புகளை செவிமடுத்த உயர் நீதிமன்ற நீதிபதி கோலின் லோரன்ஸ், வழக்கை செவிமடுப்பதிலிருந்து தாம் விலக வேண்டுமா? இல்லையா ? என்பது குறித்து இன்று ​வெள்ளிக்கிழமை தீர்ப்பு அளிப்பதாக அறிவி​த்து இருந்தார்.

22 கோடியே 80 லட்சம் ​​வெள்ளி சம்பந்தப்பட்ட​ இந்த லஞ்ச ஊழல் வழக்கை, தாம் தொடர்ந்து விசாரணை ​செய்வதால் நஜீப் தரப்பில் ஏற்படக்கூடிய பாதகத்தையும், அதனால் காத்திருக்கும் ஆபத்தின் தன்மையையும் நி​ரூபிப்பதில் நஜிப் தோல்விக் கண்டு விட்டதாக ​நீதிபதி கோலின் லோரன்ஸ் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News