Oct 12, 2026
Thisaigal NewsYouTube

மிட்சுபிஷி திரிதோன் வாகன ஓட்டுநர் தேடப்படுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மிட்சுபிஷி திரிதோன் வாகன ஓட்டுநர் தேடப்படுகிறார்

மலாக்கா, ஏப்ரல்.26-

கணவனையும், மனைவியையும் மோதித் தள்ளிவிட்டு, நிற்காமல் தப்பி விட்ட மிட்சுபிஷி திரிதோன் வாகன ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.20 மணியளவில் மலாக்கா, லெபோ அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியரை மிட்சுமிஷி திரிதோன் வாகனம் மோதித் தள்ளியது.

இதில் 53 வயது மாது ரொஸ்லீனா சினான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில், அவரின் 57 வயது கணவர் ஹிஷாம் ஓமார் கடுங் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டொப்பர் பாதிட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →