May 4, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து  கலந்துரையாடினர்
தற்போதைய செய்திகள்

மாமன்னருடன் பிரதமர் அன்வார் சந்திப்பு - முக்கிய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, மடானி அரசாங்கத்தின் சமீபத்திய முன்னெடுப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து மாமன்னருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், நாட்டின் தற்போதைய முக்கிய விவகாரங்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பானது இஸ்தானா புக்கிட் துங்கு அரண்மனையில் நடைபெற்றதாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News