Jun 30, 2026
Thisaigal NewsYouTube
மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்
தற்போதைய செய்திகள்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

Share:

முன்னாள் போக்குவரத்து அமைச்சரும், மசீச முன்னாள் தேசியத் தலைவருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக், மறைவிற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 82 வயதான துன் லிங், நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவராகவும் போற்றப்பட்டவர் என்று பிரதமர் புகழாஞ்சலி சூட்டினார்.

துன் டாக்டர் லிங்கின் மறைவு குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள பிரதமர், "துன் டாக்டர் லிங்கின் சேவைகளும் பங்களிப்புகளும் நாட்டிற்கு அளப்பரியவை; அவை எப்போதும் நினைவுகூரப்படும் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு உத்வேகமாக அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் நீண்ட காலம் பணியாற்றிய ஒரு முதுபெரும் அரசியல்வாதியை நாடு இழந்துவிட்டதாகவும் பிரதமர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Related News