லபுவான், செப்டம்பர்.28-
நாட்டில் நேற்று தொடங்கப்பட்ட புடி95 பெட்ரோல் மானியத் திட்டத்தில், முதல் நாள் மதியம் 12 மணி வரை 3.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பெற்ற முதல் பிரிவினரான காவற்படை, ஆயுதப்படையைச் சேர்ந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த மானியத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
இன்று முதல், ரஹ்மா உதவித் தொகை பெறும் 5 மில்லியனுக்கும் அதிகமான B40 பிரிவினருக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இத்திட்டம், மானியம் உண்மையாகவே தகுதியானவர்களைச் சென்றடைவதையும், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதையும் உறுதிச் செய்வதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்துள்ளார்.








