Oct 16, 2026
Thisaigal NewsYouTube

SolaRIS எனப்படும் Skim Insentif Solar Untuk Rakyat திட்டம் 2025 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
SolaRIS எனப்படும் Skim Insentif Solar Untuk Rakyat திட்டம் 2025 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

டிச. 23-

விவசாய மின் பயனர்களும் சூரிய ஒளி மின் உற்பத்தி கருவிகளை நிறுவ NEM எனும் தூய எரிசக்தி மீட்டரிங் திட்டத்தில் இணையலாம் என்று PETRA என்ப்படும் எரிசக்தி, நீர் மாற்ற அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் முயற்சியிலும் ஒரு பகுதியாகும் என PETRA குறிப்பிட்டுள்ளது.

கட்டடங்களின் கூரைகளில் அதிக சூரிய ஒளி பேனல்களை நிறுவுவதை ஊக்குவிக்கும் வகையில், NEM திட்ட வழிகாட்டுதல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே NEM திட்டத்தில் இணைந்துள்ள பயனர்கள் தங்கள் கருவிகளின் திறனை அதிகரித்துக் கொள்ளவும் புதிய விதிகளின் கீழ் செயல்படவும் அனுமதிக்கப்படுவார்கள்..

உள்நாட்டு பயனர்களுக்கு சூரிய ஒளி கருவி நிறுவலுக்கான 4,000 ரிங்கிட் வரை தள்ளுபடி வழங்கும் SolaRIS எனப்படும் Skim Insentif Solar Untuk Rakyat திட்டம் 2025 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாடுகளும் நீட்டிப்பும் 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என PETRA விளக்கியது.

2050 ஆம் ஆண்டளவில் நாட்டின் மின்சாரத்தில் 70 விழுக்காடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைய PETRA உறுதிபூண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்