தமது தந்தையை கொன்றதாக மாற்றுத் திறனாளி ஒருவர், பகாங், பெந்தோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 22 வயது கன் காக் சொங் என்ற அந்த மாற்றுத் திறனாளி கடந்த ஜுன் 24 ஆம் தேதி பெந்தோங், ஜாலான் த்ராஸ், தாமான் கெமிலாங், ஃப்லட் பூர்னாமா அடுக்குமாடி வீட்டில் 64 வயதான கன் காக் சொங் என்பவரை கொன்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை தெமர்லோ உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


