May 4, 2026
Thisaigal NewsYouTube
சந்தை நிலவரத்தினால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் உயர்வுடன் நிறைவு
தற்போதைய செய்திகள்

சந்தை நிலவரத்தினால் அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.20-

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளால் நிலவும் எச்சரிக்கையான சூழலுக்கு மத்தியில், இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட் உயர்வுடன் நிறைவடைந்ததாக பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு 10 முதல் 15 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளதால், முதலீட்டாளர்கள் மத்தியில் Risk-off எனப்படும் எச்சரிக்கை உணர்வு மேலோங்கியுள்ளதாக Bank Muamalat Malaysia Bhd தலைமை பொருளாதார நிபுணர் Afzanizam Abdul Rashid கூறினார்.

Related News