கோலாலம்பூர், ஜூலை.23-
வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் மலேசியத் தினத்தையொட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.
மலேசியத் தினத்தை மக்கள் உற்சாகத்துடன் வரவேற்கும் வகையில் செப்டம்பர் 15 ஆம் தேதி பொது விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.








