Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரர்கள் போல் நடித்து ஆடவரிடம் வெ.80,000 கொள்ளை
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர்கள் போல் நடித்து ஆடவரிடம் வெ.80,000 கொள்ளை

Share:

கிளந்தான், ஜூலை 09

போலீஸ்காரர்கள் என தங்களைக் அடையாளம் கூறிக் கொண்டு ஆடவரிடம் கொள்ளையிட்ட பத்து பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் கிளந்தான், குல கிரவ், ஸ்டோங் தபோங் என்ற இடத்தில் உள்ள தர்ப்பூசணி தோட்டத்தில் அமைந்துள்ள குடிலில் விடியற்காலை 2.40 மணியளவில் நிகழ்ந்ததாக கோல கிராய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் மஸ்லான் மாமாட் கூறினார்.

அந்த குடிலில் தங்கியிருந்த அதன் உரிமையாளரான அந்த ஆடவரை அணுகிய முகமூடி அணிந்த அக்கும்பல், தங்களை போலீஸ்காரர்கள் என அடையாளம் கூறிக் கொண்டதாக அவர் சொன்னார்.

துப்பாக்கி போன்ற ஆயுதத்தைக் காட்டியதோடு, பாராங் கத்தியையும் அவரது கழுத்தி வைத்த அக்கும்பல், குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக அவரை கைது செய்யப் போவதாக மிரட்டியதோடு அந்த ஆடவரின் கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டியுள்ளனர்.
.

பின்னர் அந்த ஆடவரின் வசமிருந்து 7,000 வெள்ளி ரொக்கம், ஒரு விவேக கைப்பேசி, டோயோட்டா ஹைலக்ஸ் வாகனம், மரம் அறுக்கும் இயந்திரம், மின்சார சைக்கிள், இரு கைக்கடிகாரங்கள் ஆகியவைற்றையும் அக்கும்பல் பறித்துச் சென்றது என்றார் அவர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்