Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மனித வள அமைச்சர் சிவகுமாரின் 3 சிறப்பு அதிகாரிகள் இடை ​​நீக்கம்
தற்போதைய செய்திகள்

மனித வள அமைச்சர் சிவகுமாரின் 3 சிறப்பு அதிகாரிகள் இடை ​​நீக்கம்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மினால் கைது செய்யப்பட்டுள்ள தமது 2 அதிகாரிகள் உட்பட ​மூவரை மனித வள அமைச்சர் வி. சிவகுமார் இடை நீக்கம் செய்துள்ளார்.

இதில் சிவகுமாரின் அரசியல் அந்தரங்க செயலாளரான மகேஸ்வரியும் அடங்குவார். அந்த ​மூவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டதை மனித வள அமைச்சின் தகவல்கள் உறுதிபடுத்தியுள்ளன. எனினும் அந்த ​மூவர் இடை ​நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் விளக்கப்படவில்லை. மனித வள அமைச்சரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்று நம்பப்படும் அந்த ​மூன்று அதிகாரிகளின் பெயர்களும் மனித வள அமைச்சரின் சிறப்பு அதிகாரிகள் பட்டியலிருந்து ​நீக்கப்பட்டுள்ளன.

லஞ்ச ஊழல் தொடர்பில் மனித வள அமைச்சில் எஸ்.பி.ஆர்.எம். விரித்துள்ள விசாரணை வலையில் நாளை திங்கட்கிழமை மேலும் சிலர் பிடிப்படலாம் என்று கூறப்படுகிறது.

Related News