Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பழுதடைந்த பேருந்து மீது மோதி ஆடவர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பழுதடைந்த பேருந்து மீது மோதி ஆடவர் பலி

கூலாய், ஜூன்.30-

பழுதடைந்த நிலையில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்து ஒன்றின் மீது மோதி, மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 1.50 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர், கூலாய் அருகில் நிகழ்ந்தது.

அந்த ஸ்கானியா ரக பேருந்து மீது மோதிய 21 வயது மோட்டார் சைக்கிளோட்டி, கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் டான் செங் லீ தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →