Sep 21, 2026
Thisaigal NewsYouTube
செம்போர்னா தங்கும் விடுதியில் சுற்றுலாப் பெண் மானபங்கம் … பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு
தற்போதைய செய்திகள்

செம்போர்னா தங்கும் விடுதியில் சுற்றுலாப் பெண் மானபங்கம் … பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவு

Share:

சபாவின் செம்போர்னாவில் உள்ள தங்கும் விடுதியில் சீனாவைச் சேர்ந்த 25 வயது பெண் சுற்றுலாப் பயணி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த விடுதியின் உரிமம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சபா சுற்றுலா, கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஜாஃப்ரி அரிஃபின் கூறுகையில், சுற்றுலா அதிகாரிகள் அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, பாதுகாப்பு குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கூறினார்.

சுற்றுலா விடுதி நடத்துநர்கள், தங்களது வளாகத்தில் தங்கும் விருந்தினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாலான் காமிரி பகுதியில் உள்ள அந்த விடுதியில், தமது அறைக்குள் ஒருவர் அத்துமீறி நுழைந்து தம்மைத் துன்புறுத்தியதாக அந்தப் பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் நேற்று ஒருவரைக் கைது செய்தனர்.

Related News

செம்போர்னா தங்கும் விடுதியில் சுற்றுலாப் பெண் மானபங்கம் …... | Thisaigal News