ஜெர்தே, ஜூலை.15-
ஓன்லைன் மோசடியில் சிக்கிய வயது குறைந்தப் பெண் ஒருவர், தனது தாயாருக்குச் சொந்தமான ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்க ஆபரணங்களை அடையாளம் தெரியாத நபரிடம் ஒப்படைத்து ஏமாந்துப் போனார்.
திரெங்கானு, ஜெர்தேவில் நடந்த இந்தச் சம்பவத்தில் உயர்க்கல்வி மேற்கொள்ளக் காத்திருக்கும் 18 வயது பெண் ஒருவர், தனி நபர்களின் வார்த்தைகளை நம்பி மோசம் போனதாக கடந்த சனிக்கிழமை போலீசில் புகார் செய்துள்ளார் என்று பெசுட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் முகமட் சானி முகமட் சால்லே தெரிவித்தார்.
அந்தப் பெண்ணை ஏமாற்றிய இரு நபர்களில் ஒருவர் தன்னை பேரா மாநில போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி என்று அடையாளம் கூறிக் கொண்டதாக முகமட் சானி குறிப்பிட்டார்.








