May 5, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் மாதத்தில் 'முஜாஹடா' உணர்வை நிலைநிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு
தற்போதைய செய்திகள்

ரமலான் மாதத்தில் 'முஜாஹடா' உணர்வை நிலைநிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் அழைப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி.18-

ரமலான் மாதத்தில் இபாடாக்கள் எனும் வழிபாடுகளை நிறைவேற்றுவதில் உள்ள உந்துதலானது 'முஜாஹடா' சீர்திருத்திக் கொள்ளும் முயற்சி எனும் உணர்வால் வழிநடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், இந்த முஜாஹடா உணர்வு மறுமைக்கான இலக்குகளை அடைவதற்கு மட்டுமல்லாமல், சுய ஒழுக்கம், வேலையில் முழுமையான அர்ப்பணிப்பு மற்றும் அன்றாடப் பணிகளில் பொறுப்புணர்வு ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவுகிறது என்று கூறியுள்ளார்.

"எல்லாப் புகழும் இறைவனுக்கே! கண்ணியமிக்க, நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட புனித ரமலான் மாதத்தை மீண்டும் அடையும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

ரமலான் மாதத்தின் நோன்பு கடமை மற்றும் இதர வழிபாடுகள் என்பது வெறும் நிபந்தனைகளையும் தூண்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல; மாறாக, புனிதமான இந்த விதிகளின் பின்னணியில் உள்ள ஞானத்தையும் நோக்கங்களையும் அடைவதே மிக முக்கியமானது," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

Related News